ஊத்தங்கரை,-ஊத்தங்கரை, அரசு மருத்துவமனையில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால், மத்திய அரசின், 15 வது நிதிக்குழு பரிந்துரைப்படி, கடந்தாண்டு ஜூனில், 23.75 கோடி ரூபாய், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஓராண்டு ஆகியும், இதுவரை இடத்தை தேர்வு செய்து, கட்டுமான பணிகளை தொடங்காமல் மாவட்ட நிர்வாகம் கிடப்பில் போட்டுள்ளது. இதை கண்டித்து, வரும், 12-ல், அனைத்து கட்சி சார்பில், ஊத்தங்கரை அரசு மருத்துவமனை முன் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்துவதாக, ஊத்தங்கரையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலர் சேகர் தலைமை வகித்தார். பா.ஜ., நிர்வாகி ஜெயராமன், தி.மு.க., மாவட்ட துணை செயலர் சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ., கிருஷ்ணமூர்த்தி, அ.தி.மு.க., மாவட்ட மருத்துவர் அணி செயலர் இளையராஜா, வி.சி.க., நிர்வாகி அசோகன், மார்க்சிஸ்ட் கம்யூ வட்ட தலைவர் மகாலிங்கம், பஞ், தலைவர்கள் மிட்டப்பள்ளி சின்னத்தாய், மூன்றாம்பட்டி பூபாலன், அனுமன் தீர்த்தம் குமார் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.