கிணற்றில் தவறி
விழுந்து விவசாயி பலிகிருஷ்ணகிரி,-கிருஷ்ணகிரி மாவட்டம், ஜெகதாப்பை சேர்ந்தவர் மணி, 65 விவசாயி. இவர் கடந்த, 31 மாலை அப்பகுதியில் உள்ள கிணறு அருகில் உள்ள மரத்தை வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக, கிணற்றில் தவறி விழுந்து இறந்தார். காவேரிப்பட்டணம் போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய நீர்த்தேக்க தொட்டிபூமிபூஜை செய்து துவக்கம்ஓசூர்,-கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம், பண்ணப்பள்ளி பஞ்., லட்சுமிபுரம் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மோசமாக இருப்பது தெரியவந்தது. இதனால், பழைய நீர்த்தேக்க தொட்டி இடித்து அகற்றப்பட்டு, 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய நீர்த்தேக்க தொட்டி கட்ட, சூளகிரி ஒன்றிய பொது நிதியில் இருந்து, 16 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.இதையடுத்து, சூளகிரி ஒன்றியக்குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத், பி.டி.ஓ.,க்கள் கோபாலகிருஷ்ணன், விமல்ரவிக்குமார் ஆகியோர், நேற்று பூமிபூஜை செய்து, நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணியை துவக்கி வைத்தனர். உதவி பொறியாளர் சியாமளா, பஞ்., தலைவர் மஞ்சுநாத் கவுடா, கவுன்சிலர் லட்சுமம்மா உட்பட பலர் பங்கேற்றனர்.
விநாயகர் கோவிலில்கும்பாபிேஷக விழாதர்மபுரி,-தர்மபுரி, நாட்டாண்மைபுரத்தில் உள்ள செல்வ விநாயகர் கோவில் கும்பாபிேஷக விழா நேற்று நடந்தது. கவுன்சிலர் நாட்டான் மாது தலைமை வகித்தார். நேற்று முன்தினம் காலை, மங்கள இசை, வாஸ்து சாந்தி, கணபதி பூஜைகள் நடந்தன. நேற்று காலை இரண்டாம் கால யாக பூஜை, கலச யாக பூஜை நடந்தன. பின்னர் கும்பாபிேஷக விழா நடந்தது. திரளானோர் பங்கேற்றனர்.