ஈரோடு,-புது எஸ்.பி., உத்தரவுப்படி, மாவட்ட போலீசார் வீதி ரோந்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.
ஈரோடு எஸ்.பி.,யாக ஜவகர் பொறுப்பெற்ற பின், பாதுகாப்பு, சட்டம் - ஒழுங்கு, போக்குவரத்து நெரிசல் தவிர்ப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.திருட்டு, கொள்ளை, வழிப்பறி, மிரட்டல், ரவுடி நடமாட்டம், தேவையின்றி திரிபவர்களை கட்டுப்படுத்த தெரு, கடைவீதிகள், பிரதான சாலைகளில் போலீசார் ரோந்து செல்ல எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.இதன்படி பைக் மற்றும் ஜீப்களில் போலீசார் ரோந்து செல்கின்றனர்.குறிப்பிட்ட போலீசார், குறிப்பிட்ட பகுதிக்கு ரோந்து சென்று, குறிப்பும் அனுப்புகின்றனர்.போக்குவரத்து நெரிசல் உள்ள இடங்களில், போக்குவரத்தை சீர்செய்யவும், தேவையானால் கூடுதல் போலீசாரை பயன்படுத்தவும் உத்தரவிட்டுள்ளதால், ஒரு வாரமாக கூடுதல் போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர்.குறித்த நேரம் தவிர மற்ற நேரங்களில் டாஸ்மாக் கடைகள், அதனுடன் இணைந்த பார்களை கண்காணிக்கின்றனர். இரவில் தேவையற்ற கடைகளை மூடவும் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.