ஈரோடு,-மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவத்தின் கீழ் இயங்கும் அனைத்து வகை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும், 2023-24ம் கல்வி ஆண்டுக்கான, 2 ஆண்டுகள் இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது.
விருப்பம் உள்ளோர் வரும், 5 முதல், 15 வரை, https://scert.tnschool.gov.in இணைய தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இயலாதோர், அருகே உள்ள ஏதேனும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன உதவியுடன் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரத்தை, இணைய தளத்திலும் அறியலாம். தமிழ், தெலுங்கு, உருதில் ஏதாவது ஒன்றை பயிற்சி மொழியாக கொள்ள விரும்புவோர், பிளஸ் 2வில் அம்மொழி பாடமாக படித்திருக்க வேண்டும். ஆங்கில வழியில் பயில விரும்புவோர், பிளஸ் 2 ஆங்கில வழியில் பயின்று இருக்க வேண்டும்.பெருந்துறை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்திலும், ஆன்லைனில் விண்ணப்பம் பதிவேற்றப்படுகிறது. பொதுப்பிரிவு, பிறர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு வயது, கட்டண சலுகை உள்ளது.