ஈரோடு,-ஈரோடு மாவட்டத்தில் ரயத்து நிறுத்தப்பட்ட பதிவுகளில், பட்டா வழங்குவது தொடர்பாக, 30ம் தேதி வரை சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:ஈரோடு மாவட்டத்தில் அனைத்து பஞ்சாயத்துக்கள், நகராட்சி, மாநகராட்சி பகுதியில் நத்தம், நகர நில அளவை கிராம ஆவணங்களில் ரயத்து நிறுத்தப்பட்டது என பதிவு செய்யப்பட்ட ரயத்து மனை, ரயத்து நஞ்சை, ரயத்து புஞ்சை நிலங்களுக்கு ஆவணங்களின் அடிப்படையில் பட்டா வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.இது தொடர்பான சிறப்பு முகாம், தாசில்தார்கள் மற்றும் தனி தாசில்தார்கள் தலைமையில் நேற்று முதல் வரும், 30 வரை பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, பட்டா பெறலாம்.சத்தியமங்கலம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் ரவிசந்திரன் தலைமையில் வரும், 6, 7, 13, 14, 20, 21ல் கோபி தாலுகா உள் வட்டத்தில் நடக்கிறது.கோபி கோட்ட கலால் அலுவலர் ஆசியா தலைமையில், 6, 7, 20, 21, 27, 28ல் வாணிப்புத்துார் உள் வட்டத்திலும், 8, 12, 13, 14, 22, 23ல் சிறுவலுார் உள் வட்டத்திலும் நடக்கவுள்ளது.கோபி தனி தாசில்தார் அஷ்ரபுன்னிசா தலைமையில், 6, 7, 13, 14, 20, 21, 22 ல் கூகலுார் உள் வட்டத்தில் நடக்கிறது. கோபி கலால் மேற்பார்வையாளர் சையத் ஹமீது தலைமையில், 13, 14ல் காசிபாளையம் உள் வட்டத்தில் நடக்கிறது. நம்பியூர் தனி தாசில்தார் துரைசாமி தலைமையில், 6, 7, 8, 13, 14, 20, 21, 22ல் நம்பியூர் உள் வட்டத்திலும் முகாம் நடக்கிறது.அந்தியூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் சண்முகசுந்தரம் தலைமையில், 6, 7, 8, 13, 14, 15, 20, 21ல் எலத்துார் உள் வட்டத்தில் நடக்கிறது. தனி தாசில்தார் துரைசாமி தலைமையில், 22, 23ல் வேமாண்டம்பாளையம் உள் வட்டத்தில் நடக்கிறது. கோபி தனி தாசில்தார் கார்த்திக் தலைமையில், அந்தியூர்உள் வட்டத்தில், 6, 7, 13, 14, 20, 21ல் நடக்கிறது. அத்தாணி உள் வட்டத்தில், 15, 16, 22, 23, 27, 28ல் முகாம் நடக்கவுள்ளது.சத்தியமங்கலம் தனி தாசில்தார் சந்திரசேகர் தலைமையில் அம்மாபேட்டை உள் வட்டத்தில், 6, 7, 13, 14, 15, 20, 21, 27, 28ல் முகாம் நடக்கிறது. கோபி தனி தாசில்தார் அஷ்ரபுன்னிஷா தலைமையில் பவானி உள் வட்டத்தில், 8, 9, 15, 16, 27, 28ல் நடக்கிறது. கோபி தனி தாசில்தார் சிவகாமி தலைமையில், குறிச்சி உள் வட்டத்தில், 14, 15ல் நடக்கிறது. கவுந்தப்பாடி உள் வட்டத்தில், 13, 16, 20, 21, 22, 23, 26, 27, 28 தேதிகளில் சிறப்பு முகாம் நடக்கவுள்ளது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.