சென்னிமலை,-மாவட்டத்தில் முருகன் கோவிலில், வைகாசி விசாக விழா, நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
முருக பெருமானின் அவதார தினமான, 67வது ஆண்டு வைகாசி விசாக விழா, சென்னிமலை முருகன் கோவிலில் நேற்று மாலை கோலாகலமாக நடந்தது. வைகாசி விசாகத்தன்று முருகப்பெருமானை வழிபட்டால், ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் நேற்று குவிந்தனர்.முன்னதாக சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் இருந்து, காவிரி தீர்த்தம் ஊர்வலமாக புறப்பட்டு, மலை கோவிலை அடைந்தது. மதியம் விழா தொடங்கியது. கலச ஸ்தாபனம், 108 சங்குஸ்தாபனம், ஜெபம், ஓமம் நடந்தது. மாலை, 4:30 மணிக்கு முருக பெருமானுக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்து, 6:30 மணிக்கு சந்தன காப்பு அலங்காரம் நடந்து, மகா தீபாராதனை காட்டப்பட்டது. அதை தொடர்ந்து சுவாமி புறப்பாடு நடந்தது.விழாவையொட்டி அதிகாலை முதலே பக்தர்கள், மலை கோவிலில் குவிய தொடங்கினர். காங்கேயம் அருகே வரதப்பம்பாளையம் கிராம மக்கள், காவடி தீர்த்த குடங்களுடன் வந்து முருகப்பெருமான வழிபட்டு சென்றனர். கந்தசாமி அன்பர்கள் குழுவினர் படி பூஜை செய்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.* திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில், வைகாசி விசாக விழாவையொட்டி மூலவருக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.* கோபி, பச்சமலை மற்றும் பவளமலை முருகன் கோவிலில், வைகாசி விசாக விழா கோலாகலமாக நடந்தது. பச்சமலை முருகனுக்கு, 108 லிட்டர் பால் ஊற்றி, தாராபிஷேகம் நடந்தது. அதையடுத்து சத்ரு சம்ஹார மகா ேஹாமம், மகா தீபாரானை நடந்தது. பவளமலை முத்துக்குமாரசாமி கோவிலில், மூலவர் மற்றும் உற்சவராக வீற்றிருக்கும் சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து திருக்கல்யாண உற்சவம் நடந்தது.