வாகனம் மோதி
தொழிலாளி பலிப.வேலுார்,--பிலிக்கல்பாளையம் அருகே, கரட்டூர் பகுதியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி, 58; கூலித்தொழிலாளி. இவர், நேற்று முன்தினம், ப.வேலுாரிலிருந்து, டூவீலரில் பிலிக்கல்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். பாண்டமங்கலம் அருகே, அண்ணாநகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த டூவீலர், வெள்ளைச்சாமி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த வெள்ளைச்சாமியை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். ப.வேலுார் போலீசார் விசாரிக்கின்றனர். திருச்செங்கோட்டில்கொப்பரை ஏலம்திருச்செங்கோடு,-திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று கொப்பரை தேங்காய் ஏலம் நடந்தது. இதில், முதல் தரம் கிலோ, 72.75 முதல் 80 ரூபாய்க்கும்; இரண்டாம் தரம், 55.75 முதல் 68.65 ரூபாய்க்கும் விற்பனையானது. மொத்தம், 66 மூட்டை கொப்பரை, 2.22 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.சரக்கு வாகனம் மோதி'காஸ்' தொழிலாளி சாவுமோகனுார்,-மோகனுார் அடுத்த ராசிபாளையம் பஞ்., காட்டுப்பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வேணுகுமார், 43; இவர், மோகனுாரில் உள்ள தனியார் காஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, வேலை முடிந்து வீட்டுக்கு, 'ஸ்பிளண்டர்' டூவீலரில் சென்றார். அப்போது, வளையப்பட்டி சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே வந்தபோது, அவ்வழியாக வந்த சரக்கு ஆட்டோ, டூவீலர் மீது மோதி விபத்துக்குள்ளானது. படுகாயமடைந்த வேணுகுமாரை, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, நேற்று காலை, 5:00 மணிக்கு, உயிரிழந்தார். இறந்த வேணுகுமாருக்கு, மணிமேகலை, 33, என்ற மனைவியும், 8, 6 வயதில் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். மோகனுார் போலீசார் விசாரிக்கின்றனர். ஓடை பகுதியிலிருந்தஆக்கிரமிப்பு அகற்றம்பள்ளிபாளையம்,-பாதரை பகுதியில், ஓடையிலிருந்த ஆக்கிரமிப்பை வருவாய்த்துறை அதிகாரிகள் அகற்றினர். பள்ளிபாளையம் அருகே, வெப்படை அடுத்த பாதரை பகுதியில் ஓடை உள்ளது. சுற்றுவட்டார பகுதியில் மழை பெய்தால், இந்த ஓடை வழியாகத்தான் மழைநீர் பாய்ந்து செல்லும். இந்த ஓடையை ஆக்கிரமித்து, அப்பகுதியை சேர்ந்த ஒருவர் ஆக்கிரமித்து, வீடு, விசைத்தறி கூடம், கட்டியிருந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி, நேற்று, வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஓடை ஆக்கிரமித்திருந்த கட்டடங்களை, பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது.பரமத்திவேலுாரில்ஜமாபந்தி நிறைவுப.வேலுார், --பரமத்தி வேலுார் தாலுகா அலுவலகத்தில், கடந்த, 24ல், திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., கவுசல்யா தலைமையில் ஜமாபந்தி துவங்கியது. ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று, பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனை, மின்னணு குடும்ப அட்டை உள்ளிட்ட கோரிக்கை அடங்கிய, 451 மனுக்களை வழங்கினர். இதில், 43 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க, ஆர்.டி.ஓ., கவுசல்யா அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், வி.ஏ.ஓ.,க்களிடம், கிராம புலப்பட தகவல் பதிவேடு, கிராமத்தில் உள்ள விவசாய நிலங்கள், பட்டா மாறுதல் பதிவேடு, தடையாணை பதிவேடு, நிலவரி வசூல் பதிவேடு, கிராம 'அ' பதிவேடு உள்ளிட்ட பல்வேறு வகையான பதிவேடுகளை ஆய்வு செய்தார். பரமத்தி வேலுார் தாலுகா அலுவலகத்தில், நேற்று ஜமாபந்தி நிறைவடைந்தது. தாசில்தார் கலைச்செல்வி, ஆர்.ஐ., லட்சுமி மற்றும் வி.ஏ.ஓ.,க்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.குடிக்க தண்ணீரின்றிபயணிகள் அவதிபள்ளிபாளையம்,-பள்ளிபாளையம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில், குடிநீர் வசதி இல்லாததால் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர்.பள்ளிபாளையம் பஸ் ஸ்டாண்ட் பகுதியிலிருந்து, தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். பயணிகள் வசதிக்காக பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இரண்டு இடங்களில் குடிநீர் வசதி அமைக்கப்பட்டிருந்தது. மேம்பால பணியால், பல மாதங்களுக்கு முன் குடிநீர்டேங்க் அகற்றப்பட்டது. இதனால் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். தாகம் எடுத்தால், பணம் கொடுத்து தண்ணீர் பாட்டில் வாங்கி தாகம் தணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குழந்தையுடன் வரும் பயணிகளும், வயதானவர்களும் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, மேம்பால பணிகளை முடிக்கும் வரை, தற்காலிக முறையில் குடிநீர் வசதி ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.