வெண்ணந்துார்-வெண்ணந்துார் அருகே, ஆலம்பட்டி, அருள்ஜோதி நகரில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.அத்தனுார்-ஆலம்பட்டி இடையே உள்ள ஓடைப்பகுதியை, தனிநபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், மழைக்காலங்களில் ஓடையில் செல்ல வேண்டிய மழைநீர், ஆலம்பட்டி, அருள்ஜோதி நகருக்குள் புகுந்து விடுகிறது.இதனால், தாழ்வாக உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்ததால், குடியிருப்பு வாசிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, அப்பகுதியை சேர்ந்த, 200க்கும் மேற்பட்டோர், நேற்று, ராசிபுரம்-ஆட்டையாம்பட்டி நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் வெண்ணந்துார் போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சாலை மறியலை கைவிட செய்தனர். இதனால், ராசிபுரம்-ஆட்டையாம்பட்டி நெடுஞ்சாலையில், ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.