கரூர்,-கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே, மனோகரா கார்னர் பகுதியில், பேரிகார்டுகள் திடீரென அகற்றப்பட்டன. இதனால், வாகனங்கள் தாறுமாறாக செல்வதால், விபத்து ஏற் படும் அபாயம் உள்ளது.கரூர் மனோகரா கார்னர் பகுதியில், திருச்சியில் இருந்து கரூர் பஸ் ஸ்டாண்டுக்கு செல்லும் வகையில், சாலையை இரண்டாக பிரித்து பல மாதங்களுக்கு முன், பேரிகார்டுகள் வைக் கப்பட்டன. வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் சென்று வந்தன.இந்நிலையில், மனோகரா கார்னரில், பேரிகார்டுகள் திடீரென அகற்றப்பட்டன. இதனால், கெளரிபுரம் பகுதியில் இருந்து வாகனங்களில் செல்கிறவர்கள், மனோகரா கார்னர் ரவுண்டானாவை சுற்றி செல்லாமல், நேரிடையாக, ஜவஹர் பஜாருக்கு தாறு மாறாக செல்கின்றனர். அதேபோல், ஜவஹர் பஜார் பகுதியில் இருந்து, நேரிடையாக எதிரே உள்ள, கெளரிபுரம் பகுதிக்கு, கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்கின்றன. இதனால், திருச்சியில் இருந்து கரூர் பஸ் ஸ்டாண்டுக்கு செல்லும் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களும், கோவை சாலையில் இருந்து, திருச்சி சாலைக்கு செல்லும் வாகனங்களும், மனோகரா கார்னரில், போக்குவரத்து நெரிசலில் நேற்று சிக்கியதால், பொதுமக்கள் அவதிப்பட்டனர். எனவே, கரூர் மனோகரா கார்னர் பகுதியில், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை தவிர்க்க, சாலையை இரண்டாக பிரித்து, பழைய நிலையில் பேரிகார்டுகளை வைக்க, போக்கு வரத்து போலீசார், நடவடிக்கை எடுக்க வேண்டியது வேண்டியது அவசியம்.