கரூர்,-கரூர் அரசு கலைக்கல்லுாரியில், தமிழ் மற்றும் ஆங்கிலம் வகுப்புக்கான, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது.கரூர் அரசு கலைக்கல்லுாரியில், 2023---24ம் ஆண்டுக்காக மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த, 30ல் தொடங்கியது. நேற்று காலை பி.ஏ., தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடபிரிவுகளுக்கு, மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடந்தது. அதில், தமிழ் மற்றும் ஆங்கிலம் வகுப்புகளில் தலா, 60 மாணவ, மாணவியர் உள்பட, 120 பேர் சேர்க்கப் பட்டனர். வரும் 5 ல் பி.காம்.,- பி.காம்.,- சி.ஏ.,- பி.பி.ஏ., ஆகிய பாடபிரிவுகளுக்கும், வரும், 6ல் பி.ஏ., வரலாறு மற்றும் பொருளாதாரம் ஆகிய பாட பிரிவுகளுக்கும், வரும், 7, 8ல் பி.எஸ்.சி., பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடக்கிறது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும், 14 மற்றும் 16ல் நடக்கிறது.கலந்தாய்வில் கல்லுாரி முதல்வர் அலெக்ஸாண்டர் (பொ) மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.