கோபால்பட்டி : கோபால்பட்டி அருகே கன்னியாபுரத்தில் ஏ.டி.எம்., மெஷினுக்கு பணம் ஏற்றிவந்த வேன், போலீஸ் ஏட்டு ஓட்டி வந்த கார் மோதிய விபத்தில் 5 பேர் காயமடைந்தனர்.
நத்தம் போலீஸ் ஏட்டு முருகேசன் 43, திண்டுக்கல் செல்ல காரில் கன்னியாபுரம் அருகே சென்றபோது, எதிரே திண்டுக்கல்லை சேர்ந்த சார்லஸ் 42, ஓட்டி வந்த ஏ.டி.எம்., மிஷினுக்கு பணம் நிரப்பும் வேனும் மோதியதில் வேன் கவிழ்ந்தது.
போலீஸ் ஏட்டு முருகேசன்,,வேன் டிரைவர் சார்லஸ், வேனில் வந்த காவலர் தாமஸ் 47, உதவியாளர்கள் அருண்குமார் 38, கவியரசு 34, உட்பட 5 பேர் காயமடைந்தனர்.
சாணார்பட்டி எஸ்,ஐ., சிராஜூதீன் விசாரிக்கிறார்.