கடலுார்: கடலுார் ஹாக்கி அகாடமி சார்பில், சண்முகசாமி நினைவு கோப்பைக்கான மாநில அளவிலான சீனியர் ஹாக்கி இறுதி போட்டி அண்ணா விளையாட்டரங்கில் நடந்தது.
கலெக்டர் அருண் தம்புராஜ், எஸ்.பி.,ராஜாராம் துவக்கி வைத்தனர். பின், நடந்த பரிசளிப்பு விழாவில் அரிஸ்டோ பப்ளிக் பள்ளி சேர்மனும், ஹாக்கி அகாடமி தலைவருமான சிவக்குமார் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் கருணாகரன் வரவேற்றார். அரிஸ்டோ பப்ளிக் பள்ளி நிறுவனர் சொக்கலிங்கம் வாழ்த்திப் பேசினார்.
சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஹாக்கி யூனிட் தலைவர் மனோகரன் பங்கேற்றார். போட்டியில் முதலிடம் பிடித்த சென்னை சிட்டி போலீஸ் அணிக்கு ரொக்கப் பரிசு மற்றும் கோப்பையும், 2ம் இடம் பிடித்த தமிழ்நாடு போலீஸ் அணி, 3ம் இடம் பிடித்த சோ சோ ஸ்போர்ட்ஸ் அகாடமி, 4ம் இடம் பிடித்த சென்னை எஸ்.கே.சி., அணிக்கு ரொக்கப் பரிசையும் அய்யப்பன் எம்.எல்.ஏ., வழங்கினார். விழாவில், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, மாநகர தி.மு.க., செயலாளர் ராஜா, செயின்ட் ஜோசப் பள்ளி முதல்வர் அருள்நாதன், அரிஸ்டோ பள்ளி நிர்வாக அதிகாரி சிவராஜ், ஒலிம்பிக் ஹாக்கி வீரர் ஆடம் சின்கிளியர், மாவட்ட விளையாட்டு அதிகாரி சிவா பங்கேற்றனர். துணைத் தலைவர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.