குள்ளஞ்சாவடி : இருதரப்பு மோதல் குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
குள்ளஞ்சாவடி அடுத்த புலியூர்காட்டு சாகை, மேற்கு தெருவை சேர்ந்தவர் ரவி மகன், சுரேஷ், 26. இவர் நேற்று முன்தினம், தனது ஊரை சேர்ந்த மலைமேகம், புஷ்ப மணிகண்டன், குமரேசன் ஆகியோருடன் பைக்கில் சென்றார்.
அதே பகுதி தொடக்கப்பள்ளி அருகில் சிலர், சுரேஷ் தரப்பினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்கள், சுரேஷ் தரப்பினரை கல்லால் தாக்கினர். அப்போது சுரேஷ் அணிந்திருந்த இரண்டு சவரன் செயின் மாயமானது. அவரது பைக்கின் முகப்பு சேதமடைந்தது. காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
சுரேஷ் அளித்த புகாரின் பேரில், தகராறில் ஈடுபட்ட கலைவாணன், திலீபன், கோபிநாத், மணிபாலன், பிரபாகரன், ராஜேந்திரன் ஆகியோர் மீது, குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.