கடலுார் : கருணாநிதி நுாற் றாண்டு விழாவையொட்டி, அவரது உருவப்படத்திற்கு தி.மு.க., நிர்வாகிகள் மரியாதை செலுத்துமாறு மாவட்ட செயலாளர், அமைச்சர் பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:
கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது படத்திற்கு கடலுார் கிழக்கு மாவட்டத்தில் ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர், வட்டம், வார்டு, கிளைகள் தோறும் மரியாதை செலுத்தி, கொடியேற்றி, நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்.
மேலும் கருணாநிதி நுாற்றாண்டு விழா பொதுக்கூட்டம் முதல்வர் தலைமையில் ஜூன் 3ம் தேதி வடசென்னையில் நடக்கிறது.
இதில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இதில், கடலுார் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாநில, மாவட்ட, நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய, பகுதி, நகர, பேரூர் செயலாளர்கள் மற்றும் அனைத்து நிர்வாகிகள், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் திரளாக பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அவர், கூறியுள்ளார்.