பாலக்காடு ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்த 2 ரயில்களில், ரயில்வே பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில், 13.8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது; 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கேரள மாநிலம் பாலக்காடு ரயில்வே ஸ்டேஷனில், ரயில்வே பாதுகாப்பு படையும், எக்சைஸ் துறையும் ஒருங்கிணைந்து நேற்று காலை சோதனை நடத்தினர். அப்போது வந்த தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலில், வந்திறங்கிய மூவரை சந்தேகத்தின் அடிப்படையில் நடத்திய சோதனையில், அவர்களது பையில் 2.3 கிலோ எடை கொண்ட கஞ்சாவை மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், அவர்கள் கோழிக்கோடு மாவட்டத்தைச்சேர்ந்த நிபின், 27, ஸ்ரீஷ் 24, சுர்ஜித், 37 ஆகியோர் என்பதும், விசாகப்பட்டினத்தில் இருந்து வாங்கிய கஞ்சாவை, கோழிக்கோடு பகுதியில் விற்பனை செய்வதற்காக கொண்டு செல்வதும் தெரியவந்தது. அவர்கள் கைது செய்யப்பட்டனர். அதேபோல், நேற்று காலை வந்தடைந்த சபரி எக்ஸ்பிரஸ் ரயிலை சோதனையிட்டபோது, பொதுப்பெட்டியில், 11.5 கிலோ எடை கொண்ட கஞ்சா கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.