தமிழகத்தில், ஈரோடு, மதுரை உள்ளிட்ட எட்டு நகரங்களில், புதிய மனைப்பிரிவு திட்டங்களை செயல்படுத்த, கூட்டுறவு வீட்டுவசதி துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில், 680 கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள் உள்ளன. இதில் விற்கப்படும் மனைகளை வாங்குவோருக்கு, பத்திரப்பதிவில், முத்திரைத்தீர்வை செலுத்துவதில் விலக்கு அளிக்கப்படுகிறது.கடந்த, 20 ஆண்டுகளாக புதிய மனை பிரிவு திட்டங்களை, சங்கங்கள் செயல்படுத்தவில்லை.
புதிய திட்டங்கள் துவங்குவது குறித்து, கூட்டுறவு வீட்டுவசதி சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
அமைப்பு ரீதியாக ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக, பயன்படுத்தாமல் விடப்பட்ட நிலங்களை மேம்படுத்தி, மனைகளாக்க முடிவு செய்து இருக்கிறோம். அதன்படி, 241 ஏக்கர் நிலத்தில், எட்டு புதிய மனைப்பிரிவு திட்டங்களை செயல்படுத்த இருக்கிறோம். தற்போதைக்கு ஈரோடு, மதுரை பகுதிகளில் மனைப் பிரிவு உருவாக்க உறுதி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற ஆறு நகர்கள் குறித்து, விரைவில் அறிவிப்பு ெவளியாகும்.