தஞ்சாவூர்:தஞ்சாவூர், செல்வம் நகரைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் சேவியர், 45. இவருக்கு, பாலாஜி நகரைச் சேர்ந்த ராஜ்குமார், 35, அறிமுகமானார்.
அன்பழகன் என்பவருக்கு அரசு வேலை வாங்கித்தருமாறு, ராஜ்குமாரிடம், பிரான்சிஸ் சேவியர் கூறியுள்ளார்.
தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழகத்தில் இரவுக்காவலர் வேலை வாங்கித் தருவதாக கூறியதால், அன்பழகனிடம் இருந்து, பிரான்சிஸ் சேவியர், 58 ஆயிரம் ரூபாய் வாங்கி, ராஜ்குமாரிடம் கொடுத்தார்.
சில நாட்களில் பணி நியமன ஆணையை ராஜ்குமார் கொடுத்துள்ளார். அந்த ஆணையை, அன்பழகன் நுகர் பொருள் வாணிப கழகத்திற்கு கொண்டு சென்ற போது, அது போலி ஆணை என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அன்பழகன், பணத்தை வாங்கித் தருமாறு பிரான்சிஸ் சேவியரிடம் கூறினார்.
பிரான்சிஸ் சேவியர், தஞ்சை தெற்கு போலீசில் புகார் அளிக்க, போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று முன்தினம் இரவு ராஜ்குமாரை கைது செய்தனர்.