சேலம்:சேலம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை, 5 ஆக உயர்ந்தது.
சேலம், இரும்பாலை அருகே எஸ்.கொல்லப்பட்டியைச் சேர்ந்த கந்தசாமி, 63, வீரமணி, 54, சடையாண்டியூரைச் சேர்ந்த வெங்கடேசன் மனைவி மகேஸ்வரி, 40, ஆகியோர் பங்குதாரர்களாக இருந்து, நாச்சியார் கோவில் பின்புறம் பட்டாசு ஆலை நடத்தினர்.
கடந்த, 1ல் நாட்டுவெடி தயாரித்த போது, இந்த ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் சதீஷ்குமார், 41, நடேசன், 50, பானுமதி, 60, உடல் கருகி பலியாகினர்.
படுகாயமடைந்த ஆறு பேர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நேற்று காலை பிரபாகரன், மோகனா ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் இந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை, 5 ஆக உயர்ந்தது.