சேலம்:கைதி ஆசனவாயில் மறைத்து வைத்த மொபைல்போன் மற்றும் பேட்டரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், ஜீவா நகரைச் சேர்ந்தவர் ராஜா, 23. இவர், போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு, ஏப்., 7ல் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறை சோதனை குழுவினர், நேற்று காலை, 7:00 மணிக்கு சோதனை மேற்கொண்ட போது ராஜாவின் நடை, பாவனையில் சந்தேகம் ஏற்பட்டது. அவரை தோப்புக்கரண பாணியில் பலமுறை அமர வைத்து எழுப்பினர்.
அப்போது, ஆசனவாயில் மறைந்து வைத்திருந்த, பாலிதீன் கவருடன் மொபைல் போன், இரு பேட்டரி, 1 கிராம் போதை பொருள் இருந்தது தெரியவந்தது.
அஸ்தம்பட்டி போலீசார், ராஜா மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.