கலெக்டர் முகாம் ஆபீஸ் பற்றி வதந்தி மாவட்ட நிர்வாகம் போலீசில் புகார்
Updated : ஜூன் 04, 2023 | Added : ஜூன் 03, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Rumors about the Collectors camp office were reported to the police by the district administration   கலெக்டர் முகாம் ஆபீஸ் பற்றி வதந்தி மாவட்ட நிர்வாகம் போலீசில் புகார்

புதுக்கோட்டை:புதுக்கோட்டை கலெக்டரின் முகாம் அலுவலகத்தில், விநாயகர் சிலையை அகற்றியதாக சமூக வலைதளங்களில் தகவல் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, மாவட்ட நிர்வாகம் போலீசில் புகார் அளித்துள்ளது.



சமூக வலைதளம்




புதுக்கோட்டை கலெக்டராக இருந்த கவிதாராமு பணியிட மாற்றம் செய்யப்பட்டு, புதிய கலெக்டராக மெர்ஸி ரம்யா பொறுப்பேற்றார்.

இந்நிலையில், கலெக்டரின் முகாம் அலுவலகத்தில் இருந்த விநாயகர் சிலை, நேற்று அகற்றப்பட்டதாக, சமூக வலைதளங்களில் படங்களுடன் தகவல் பரவியது.இதனால் பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்புகள் சார்பில், முகாம் அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். போலீசார் அவர்களிடம் பேச்சு நடத்தினர்.

கலெக்டர் மெர்ஸி ரம்யா, பா.ஜ., கட்சி பொறுப்பாளர்களை கலெக்டர் அலுவலகத்திற்கு வரவழைத்து, விளக்கம் அளித்தார். மேலும், 'முகாம் அலுவலகத்தில் இருந்த விநாயகர் சிலை அகற்றப்படவில்லை. விநாயகர் சிலை உடையவில்லை. தவறான தகவல் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவிக்கப்படும்' என, தெரிவித்தார்.



விசாசாரணை




ஜாதி, மத அடையாளமின்றி, அரசியல் அமைப்பு சட்டப்படி மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு

வருவதாக, அவர்களிடம் விளக்கம் அளித்தார்.தொடர்ந்து, அவர்கள் கலைந்தனர். இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் அளித்த புகாரின்படி, சைபர் கிரைம் போலீசார்
விசாரிக்கின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X