திருவாடானை:ஆந்திராவில் இருந்து வந்த கஞ்சாவை, ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை, பி.பி.குளத்தைச் சேர்ந்தவர் ேஷக் முகமது, 29. கஞ்சா கடத்துவதை தொழிலாக கொண்ட இவர், நேற்று முன்தினம் இரவு தொண்டி கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் தொண்டி கடற்கரை பகுதியில் சுற்றித் திரிந்த ேஷக் முகமதுவை கைது செய்தனர். அவரது தகவலில், தொண்டி அருகே முள்ளிமுனையைச் சேர்ந்த ராஜா, 37, மணக்குடி கணேசன், 31, புதுப்பையூர் பாக்கியராஜ், 34, ஆகிய மேலும் மூவரை கைது செய்தனர்.
போலீசார் கூறுகையில், 'ேஷக் முகமது ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி, தொண்டி கடல் வழியாக அடிக்கடி இலங்கைக்கு கடத்தி வந்துள்ளார்.
'நேற்று அவரை பிடித்து விசாரணை செய்த போது, மற்ற மூவரும் அவருக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. கஞ்சாவை எங்கு பதுக்கி வைத்துள்ளனர் என்பது குறித்து விசாரிக்கிறோம்' என்றனர்.