கோயில்
திருஞானசம்பந்தர் மூர்த்தி நாயனார் குருபூஜை விழா; மதுரை ஆதினம் மடம், தெற்கு ஆவணி மூல வீதி, மதுரை, வழங்குபவர்: மதுரை ஆதினம், பெறுபவர்: காளியப்பன், மாலை 6:45 மணி, சொற்பொழிவு இரவு 7:00 மணி.
வைகாசி பெருந்திருவிழா 10 நாள் எடுப்புச்சப்பரம் சப்தாவரணம்: கூடலழகர் கோயில், மதுரை, வேதாந்த தேசிகர் சன்னதி எழுந்தருளல், காலை 9:00 மணி, அலங்கார திருமஞ்சனம், மாலை 4:00 மணி.
வைகாசி பெருந்திருவிழா 11 நாள்: காளமேகப்பெருமாள் கோயில், திருமோகூர், உற்ஸவ சாந்தி அலங்கார திருமஞ்சனம் முடிந்து ஆஸ்தானம் சேருதல், காலை 10:00 மணி.
உற்ஸவப்பெருவிழா - கூழாற்றுதல்: காளியம்மன் கோயில், வடக்கு வாசல் தமிழ்ச்சங்கம் ரோடு, மதுரை, மாலை 4:00 மணி.
வைகாசி 14ம் நாள் திருவிழா: ஜெனகை மாரியம்மன் கோயில், சோழவந்தான், அன்ன வாகனத்தில் அம்மன் வீதியுலா, இரவு 8:00 மணி.
பக்தி சொற்பொழிவு
வாழும் வள்ளுவம்: நிகழ்த்துபவர் - லோகநாதன், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, ஏற்பாடு: மதுரை திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.
மகா பெரியவர் ஜெயந்தியை முன்னிட்டு வில்லிபாரத தொடர் சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - திருச்சி கல்யாணராமன், வசுதாரா கருத்தரங்கு கூடம், ஆண்டாள்புரம், மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுகிரஹம் நெல்லை பாலு, மாலை 6:30 மணி.
திருவாசகம் முற்றோதல் பக்தியோகம்: நிகழ்த்துபவர் - பிரம்மச்சாரி விஷ்ணு சைதன்யா, ராமகிருஷ்ண மடம், ரிசர்வ்லைன், மதுரை, காலை 8:45மணி.
பொது
வெற்றிக்கரமான ஏற்றுமதியாளராவது எப்படி, ஸ்டார்ட் ஆப் தொடங்குவது எப்படி - கருத்தரங்கு: தியாகராஜர் கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: ஏற்றுமதி பயிற்சியாளர் சேதுராமன் சாத்தப்பன், முன்பதிவு செய்தவர்கள் மட்டும் பங்கேற்கலாம், ஏற்பாடு: தமிழ் பிசினஸ் நியூஸ் மீடியா, காலை 9:30 மணி.
ஒய்.ஜி.மகேந்திரா குழுவினரின் இது நியாயமா சார் நாடகம்: ராஜா முத்தையா மன்றம், மதுரை, ஏற்பாடு: தமிழ் இசைச் சங்கம், மாலை 6:30 மணி.
மீனாட்சி அம்மன் கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் நினைவஞ்சலி கூட்டம்: அண்ணா பூங்கா, திருநகர், மதுரை, பங்கேற்பு: செல்வா, மருத்துவர் சுப்பிரமணியன், கப்பலுார் தொழிலதிபர் சங்கத்தலைவர் ரகுநாத ராஜா, தியாகராஜர் பொறியியல் கல்லுாரி பேராசிரியர்மகேந்திரன், ஏற்பாடு: திருநகர் மக்கள் மன்றம், காலை 8:00 மணி.
பட்டமளிப்பு விழா: ஒபுளா படித்துறை, மதுரை, எனது ஹிஜாப் எனது உரிமை விழிப்புணர்வு நாடகம் பங்கேற்பு: பரிதா ரிஸ்வானா ஆலிமா,பேச்சாளர் அப்துர் ரஹ்மான், ஏற்பாடு: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் மதுரை, மாலை 5:00 மணி.
உலக சுற்றுச்சூழல் தினம் - வைகை ஆற்றில் பாலித்தீன் குப்பையை அகற்றும் பணி: ராமராயர் மண்டபம், மதிச்சியம், மதுரை, ஏற்பாடு: வைகை நதி மக்கள் இயக்கம், காலை 8:00 மணி.
சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா: கல்கி பவுண்டேஷன் டிரஸ்ட் அலுவலகம், ஹார்விபட்டி, மதுரை, தலைமை: தலைவர் அங்குலட்சுமி மகாலிங்கம், பரிசு வழங்குபவர்: கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் சொக்கலிங்கம், காலை 11:00 மணி.
கோடை கால பயிற்சி முகாம்: மஹா மகால், திருவாதவூர், பங்கேற்பு: தலைமை ஆசிரியர் தென்னவன், ஏற்பாடு: பேஸ்கார் குருசாமி அறக்கட்டளை, அறிவகம் கல்வி மையம், காலை 9:30 மணி.
சர்வதேச யோகா தினத்தையொட்டி பவுர்ணமி தியானம்: கீதா நடன கோபால நாயகி மந்திர், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: மகாத்மா காந்தி யோகா நிறுவனம், இந்தியன் யோகா சங்கம், பங்கேற்பு: பேராசிரியர் ரவிச்சந்திரன், மாலை 5:30 மணி.