சங்கராபுரம்-ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் நலம் பெற வேண்டி கூட்டு பிரார்த்தனை நடந்தது.
சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, பொதுசேவை கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் முத்துக்கருப்பன், குசேலன் தலைமை தாங்கினர். ஒடிசா மாநிலத்தில் நடந்த ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் பூரணமாக நலம் பெறவும், இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடையவும் அகவல் படித்து கூட்டு பிரார்த்தனை செய்யப்பட்டது.
பேரூராட்சி தலைவர் ரோஜா ரமணி, சைவ சித்தாந்த அமைப்பாளர் ஜம்புலிங்கம், தமிழ் படைப்பாளர் சங்க தலைவர் இளையாப்பிள்ளை, அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் சேகர், முன்னாள் தலைவர் ரவி, மூர்த்தி, நெடுஞ்செழியன், திருக்குறள் பேரவை செயலாளர் லட்சுமிபதி, இன்னர்வீல் கிளப் தலைவர் மஞ்சுளா கோவிந்தராஜ், வாசவி கிளப் தீபா சுகுமார், மோட்டார் வாகன சங்கத்தலைவர் திருவேங்கடம், ராசா, ஓய்வு அலுவலர் சங்கத்தலைவர் கலியமூர்த்தி, ஜெய்பிரதர்ஸ் நற்பணி மன்ற தலைவர் விஜயகுமார், ரோட்டரி தலைவர் (தேர்வு) நடராஜன், அரிமா மாவட்ட தலைவர் வேலு உட்பட பலர் பங்கேற்றனர்.