விழுப்புரம்-விழுப்புரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி 100வது பிறந்த நாள் விழாவையொட்டி தி.மு.க., சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
எம்.எல்.ஏ., அலுவலக வளாகத்தில், கருணாநிதி படத்திற்கு, எம்.எல்.ஏ.,க்கள் புகழேந்தி, லட்சுமணன் ஆகியோர் மலர் துாவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, கலைஞர் அறிவாலயத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு, மாலை அணிவித்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், நகர செயலாளர்கள் சக்கரை, ஜீவா, நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, ஒன்றிய செயலாளர்கள் தெய்வசிகாமணி, மும்மூர்த்தி, பிரபாகரன், விஸ்வநாதன், ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம்.
மாவட்ட இளைஞரணி தினகரன், மாணவரணி ஸ்ரீவினோத், நகர நிர்வாகிகள் இளங்கோ, புருஷோத்தமன், சோமு, ஜனனி தங்கம், மணவாளன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். தொடர்ந்து, ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர்.