ரிஷிவந்தியம்-பழையசிறுவங்கூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி, அவரது படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது.
ரிஷிவந்தியம் அடுத்த பழையசிறுவங்கூரில் நடந்த நிகழ்ச்சிக்கு, கள்ளக்குறிச்சி தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.
மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், ஒன்றிய செயலாளர் பெருமாள், ஒன்றிய சேர்மன் வடிவுக்கரசி சாமிசுப்ரமணியன் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் முதல்வரும், தி.மு.க., முன்னாள் தலைவருமான கருணாநிதியின் 100வது பிறந்தநாளையொட்டி அவரது உருவபடத்திற்கு வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மலர் துாவி, மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராஜூ, ஊராட்சி தலைவர்கள் செல்லம்மாள் பால்ராஜ், கோமதி சுரேஷ், நிர்வாகி செல்வகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.