தியாகதுருகம்--தியாகதுருகம் வடக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.
தியாகதுருகம் வடக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார்.
தெற்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, தலைமை செயற்குழு உறுப்பினர் எத்திராஜ், மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், ஒன்றிய சேர்மன் தாமோதரன், அவைத் தலைவர் நுார்முகமது முன்னிலை வகித்தனர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படத்திற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும் கட்சி கொடி ஏற்றி கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
மாவட்ட பிரதிநிதி நெடுஞ்செழியன், இளங்கோவன், அப்துல் கபூர், துணை செயலாளர்கள் பாலு, தேவி பழனிவேல், இளைஞரணி அமைப்பாளர் ஏழுமலை, ஊராட்சி தலைவர் அப்போலியன், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் இப்ராஹிம், பாண்டு உட்பட பலர் கலந்து கொண்டனர்.