தியாகதுருகம்-தியாகதுருகம் அடுத்த மடம் கிராமத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, தியாகதுருகம் தெற்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். கிளை செயலாளர் கேசவன், ஒன்றிய வர்த்தக அணி நிர்வாகி நாகராஜ், ஒன்றிய பிரதிநிதி கணபதி, அவைத்தலைவர் சாமிதுரை முன்னிலை வகித்தனர்.
ஊராட்சி தலைவர் சுரேஷ் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக, கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட துணை செயலாளரும், மாவட்ட சேர்மனுமான புவனேஸ்வரி பெருமாள் பங்கேற்று, கருணாநிதி உருவ படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் கொளஞ்சி, மாவட்ட கவுன்சிலர் பழனியம்மாள் அய்யாசாமி, துணைத் தலைவர் சபிதா, நிர்வாகிகள் வெங்கடேசன், ரஞ்சித், சீனிவாசன், சுரேஷ், வடமலை, மாவட்ட மகளிரணி தலைவர் சுகன்யா நாராயணசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.