கள்ளக்குறிச்சி-உளுந்துார்பேட்டை அருகே பிடாகம் ஊராட்சியில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 8.20 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டது.
உளுந்துார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பிடாகம் ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.1.70 லட்சம் மதிப்பீட்டில் நுாலகம் புனரமைக்கப்பட்டுள்ளது. அதனை மணிக்கண்ணன் எம்.எல்.ஏ., முன்னிலையில் கலெக்டர் ஷ்ரவன்குமார் துவக்கி வைத்தார். தொடர்ந்து, பிடாகம் ஊராட்சியில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.8.20 லட்சத்தில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் மூலம் பொதுமக்களுக்கு தூய்மையான குடிநீர் வழங்கும் சேவை மற்றும் இலவச அமரர் ஊர்தி சேவையை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் உளுந்துார்பேட்டை ஒன்றிய சேர்மன் ராஜவேல், பி.டி.ஓ., ராஜி, மாவட்ட கவுன்சிலர் பிரியாபாண்டியன், ஒன்றிய கவுன்சிலர் ராதா மனோகர், ஊராட்சி தலைவர் நந்தகுமார், பி.டி.ஓ.,க்கள் ராஜேந்திரன், ஜெயராமன், ஒன்றிய பொறியாளர் மனோரஞ்சனி, அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.