ரெட்டியார்சத்திரம் : கொத்தப்புள்ளி, கே புதுக்கோட்டை ஊராட்சிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் பூங்கொடி ஆய்வு செய்தார்.
ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கொத்தப்புள்ளி அருகே தாதன்கோட்டை தொடக்கப்பள்ளியில் 31.26 லட்ச ரூபாய் மதிப்பில் வகுப்பறையும், 12.61 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி, சமையலறை பழுது பார்த்தல், 199 லட்சம் மதிப்பில் எரிவாயு தகனமேடை உள்ளிட்ட கட்டட பணிகள் நடக்கிறது.
இவற்றை ஆய்வு செய்த கலெக்டர், பணியின் தரம் கட்டுமான விதம் குறித்து கேட்டறிந்தார். கே.புதுக்கோட்டை-ஜி.நடுப்பட்டி, தாதன்கோட்டை-கதிரனம்பட்டி இடையிலான ரோடு சீரமைப்பு பணிகளையும் ஆய்வு செய்தார்.
அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கான வீடு கட்டும் உத்தரவுகளை வழங்கினார். கே.புதுக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவமனை வளாகம் வெளி நோயாளிகள் பிரிவு பதிவு சீட்டு வழங்கும் இடம், பணியாளர்கள் வருகை பதிவேடுகள், பராமரிப்பு மருந்து பொருள் இருப்பு விபரம், குழந்தைகள் மகளிருக்கான பரிசோதனை சிகிச்சை பிரிவு உள்ளிட்ட இடங்களிலும் ஆய்வு நடத்தினார்.
அலைக்கழிப்பு, தாமதம் தவிர்த்து சிகிச்சை முறைகளை மேம்படுத்த ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார். பி.டி.ஓ.,க்கள் மலரவன், கிருஷ்ணன் உடன் சென்றனர்.