நாமக்கல்: தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதியின், நுாற்றாண்டு விழா, தி.மு.க., சார்பில், மாநிலம் முழுவதும், நேற்று கொண்டாடப்பட்டது.
கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின், நுாற்றாண்டு துவக்க விழா, நாமக்கல்-மோகனுார் சாலை அண்ணாதுரை சிலை அருகே நடந்தது. நகர செயலாளர்கள் பூபதி, ராணா ஆனந்த், சிவக்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். எம்.எல்.ஏ., ராமலிங்கம் முன்னிலை வகித்தார்.
கிழக்கு மாவட்டசெயலாளரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார், கருணாநிதி படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, கட்சியின், மூத்த முன்னோடிகள், 100 பேருக்கு, வேட்டி, சேலை வழங்கினார். மாவட்ட அவைத் தலைவர் மணிமாறன், தலைமை செயற்குழு உறுப்பினர் டாக்டர் மாயவன், நாமக்கல் நகராட்சி தலைவர் தலைவர் கலாநிதி உள்பட பலர் பங்கேற்றனர். முடிவில், ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு, அஞ்சலி செலுத்தப்பட்டது.
* முன்னாள் மத்திய இணை அமைச்சர் காந்திச்செல்வன் வீட்டில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நுாற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.
காந்திச்செல்வன் தலைமை வகித்து, கருணாநிதியின் படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார். டாக்டர் இளமதி, வக்கீல் சுகுமார், செல்வமணி, பால் ரவிச்சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.