எருமப்பட்டி: கொல்லிமலையில் பலாப் பழ சீசன் முடிந்ததால், நாமக் கல் பகுதிக்கு பண்ருட்டி பலாப் பழங்கள் வரத்து அதிகரித்துள்ளது.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் ஆனி மாதம் துவங்கி, நான்கு மாதங்களுக்கு பலாப்பழம் சீசன் உள்ளது. இந்த மாதங்களில் விவசாயிகள் நேரடியாக பலாப்பழங்களை கொண்டு வந்து நாமக்கல், எருமப்பட்டி, சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்கின்றனர்.
மற்ற எட்டு மாதங்களில், கொல்லிமலையிலிருந்து பலாப் பழம் அதிகளவில் வரத்து இல் லாததால், பல வியாபாரிகள் பண் ருட்டி உள்ளிட்ட பகுதிகளில் பழங்களை வாங்கி வந்து விற் பனை செய்து வருகின்றனர். தற்போது இப்பகுதியில் கோடைகால பலாப்பழங்கள் சீசன் துவங்கியுள்ளதால், பண்ருட் டியிலிருந்து பலாப்பழம் வரத்து அதிகரித்துள்ளது.
இதுகுறித்து, வியாபாரி ஒருவர் கூறியதாவது:
கொல்லிமலை பலாப்பழம், அதிக சுவையுடையதாக இருந்தா லும், நான்கு மாதங்களில் சீசன் முடிந்துவிடுகிறது. இதனால், பண்ருட்டியிலிருந்து பழங்களை வாங்கி வந்து கிலோ, 35 ரூபாய்க்கு விற்பனை செய்து வரு கிறேம்.
இவ்வாறு அவர் கூறினார்.