நாமக்கல்: 'மானிய விலையில் விதைகள் வினியோகம் செய்யப்படுகிறது. தேவையான விவசாயிகள் பெற்று பயன்பெறலாம்' என, நாமக்கல் வட்டார உதவி வேளாண் இயக்குனர் சித்ரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் வட்டார வேளாண் -உழவர் நலத்துறை சார்பில், சோளம், சாமை மற்றும் பயறு விதைகள், மானிய விலையில் வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு விதைப்புக்கு தேவையான சோளம், சாமை மற்றும் நிலக்கடலை, பயறு வகை பயிர்களான உளுந்து, பாசிப்பயறு விதைகள், நாமக்கல் வட்டார ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் கையிருப்பு உள்ளன.
விதைகள் தேவைப்படும் விவசாயிகள், தங்களின் நில உடமை சான்று, சிட்டா மற்றும் ஆதார் அட்டை நகல் கொண்டு வந்து, தங்கள் சாகுபடிக்கு தேவையான விதையை, மானிய விலையில் வேளாண் விரிவாக்க அலுவலகத்தை நேரில் அணுகி பெற்றுக்கொள்ளலாம்.
விபரங்களுக்கு, அந்தந்த பகுதி உதவி வேளாண் அலுவலர்கள் கோபிநாத், -97888 83554, சதீஸ்குமார், -75072 54436, திலீப்குமார், -85248 85585, மாலதி, -76390 81100 ஆகியோரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.