கரூர்: மயிலாடுதுறை மாவட்டம், கும்பகோணத்தைச் சேர்ந்தவர் கவுதமன், 56. இவரது மகளுக்கு மாப்பிள்ளை பார்க்க, கோவை மாவட்டம், சூலுாருக்கு, உறவினர்கள் கவுரி, 48, மாலா, 40, உட்பட ஆறு பேருடன் 'மாருதி எர்டிகா' காரில் சென்றனர்.
நேற்று மதியம், 3:௩௦ மணிக்கு, கரூர் மாவட்டம் பரமத்தி அருகே லட்சுமிபுரம் வழியாக சென்ற போது, எதிரே வந்த மினி வேனுடன் கார் பயங்கரமாக மோதியது.
இதில், கவுதமன், கவுரி சம்பவ இடத்தில் பலியாகினர். மற்ற ஐந்து பேர், மினி வேன் டிரைவர் இளவரசன், 35, லேசான காயத்துடன் தப்பினர். க.பரமத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.