வேலுார்: ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், தலைமை ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
வேலுார், தோட்டப்பாளையம், எட்டியம்மன் கோவில் தெருவில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக செந்தில்குமார், 50, மற்றும் ஏழு பெண் ஆசிரியைகள் பணிபுரிந்தனர்.
இதில், செந்தில்குமார் பாலியல் ரீதியாக அத்துமீறி செயல்படுவதாக ஏழு ஆசிரியைகளும், மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி தயாளனிடம், மார்ச்சில் புகார் அளித்தனர்.
தொடர்ந்து நடந்த விசாரணையில், தலைமை ஆசிரியர் செந்தில்குமாரை, குருமலை பஞ்., யூனியன் நடுநிலைப்பள்ளிக்கு இடமாறுதல் செய்து உத்தரவிட்டார்.
மேலும், பாலியல் புகார் குறித்து முழு விசாரணை நடத்தப்பட்ட பின், செந்தில்குமார் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.