கரூர்: தர்மபுரி மாவட்டம் தீவட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த சந்திரா, கலா ஆகிய மாவோஸ்டுகள் இருவரும், கரூர் மாவட்டம் வெங்கமேட்டில் 2016ல் தங்கியிருந்தனர்.
அப்போது, கியூ பிரிவு போலீசார், சட்ட விரோத தடுப்புச் சட்டத்தில் இருவரையும் கைது செய்து, திருச்சி மத்திய பெண்கள் சிறையில் அடைத்தனர்.
அவர்களுக்கு உதவியதாக மதுரையைச் சேர்ந்த முருகன் கைது செய்யப்பட்டார். பின், கலாவும், முருகனும் ஜாமினில் வந்தனர். இந்த வழக்கு கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடக்கிறது.
நேற்று முன் தினம் நடந்த வழக்கு விசாரணையின் போது, திருச்சி மத்திய பெண்கள் சிறையில் இருந்து சந்திராவை, போலீசார் அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். ஜாமினில் உள்ள கலாவும், முருகனும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
வழக்கை விசாரித்த முதன்மை நீதிபதி சண்முகசுந்தரம், விசாரணையை வரும் 12ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.