பக்தியும், ஒழுக்கமும் இளமையில் வரவேண்டும்: ஆன்மிக சொற்பொழிவாளர் நாகை முகுந்தன் பேச்சு
Added : ஜூன் 05, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Piousness and morals should come at a young age, says spiritual speaker Nagai Mukundan   பக்தியும், ஒழுக்கமும் இளமையில் வரவேண்டும்: ஆன்மிக சொற்பொழிவாளர் நாகை முகுந்தன் பேச்சு

திருப்பூர்;'பக்தியும், ஒழுக்கமும் இளமையிலேயே வரவேண்டும்,' என, ஆன்மிக சொற்பொழிவாளர் நாகை முகுந்தன் பேசினார்.

ஸ்ரீமகா பெரியவரின் 130வது அவதார ஜெயந்தி விழா, திருப்பூர் ஓடக்காடு ராமகிருஷ்ண பஜனை மடத்தில் நேற்று நடந்தது. ஆச்சாரியாளின் பாதுகா தரிசனத்தை தொடர்ந்து, 'நடமாடும் தெய்வம்' என்கிற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவாளர் நாகை முகுந்தன் பேசியதாவது:

மகா பெரியவர் அவதரித்தார் என்று சொல்கிறோம். அவதாரம் என்பதற்கு, வானம் முதலான மேலிருந்து கீழே இறங்கிவருதல் என்று நாம்தவறாக புரிந்துவைத்துள்ளோம்.

கீழ்நிலையில் உள்ள நம்மை மேல் நிலைக்கு உயர்த்துவதற்காக மகாபெரியவா போன்ற மேல் நிலையில் உள்ளோர், கீழ் நிலைக்கு இறங்கிவருகின்றனர். அதனாலேயே, அவர்களை அவதாரம் என்கிறோம்.

சூரிய ஒளியைப்போல பகவானின் அருள் எல்லா இடங்களிலும் பரவியுள்ளது. அந்த அருள் நம்மை வந்து அடையவேண்டுமானால், குருவின் துணை வேண்டும்.

நமது நாட்டில் வாழையடி வாழையாக மகாபுருஷர்கள் தோன்றிக்கொண்டே இருக்கிறார்கள். நம்மை போன்ற சாதாரண மனிதர்களைப்போலவே மகா பெரியவருக்கும், சுவாமிநாதன் என்று பெயர் வைத்தனர்.

தந்தைக்கு உபதேசம் செய்த முருகப்பெருமானின் பெயர், சுவாமிநாதன். இதை உணர்ந்தே, மகாபெரியவருக்கு சிறுவயதிலேயே அப்பெயர் சூட்டியுள்ளனர். வீட்டு கழிவுநீர் வந்துசேரும் சேற்றிலிருந்து வளர்ந்து பயன்தரும் வாழைமரம். அதுபோல, மகான்களெல்லாம், சமுதாய சேற்றில் அமிழ்ந்துவிடாமல், நம்மை கைகொடுத்து துாக்கிவிடுகின்றனர்.

மகா பெரியவா என்று நாம் அழைக்கிறோமே அதற்கான காரணம் என்ன தெரியுமா. யார் ஒருவர் எல்லா செல்வங்களையும் துறக்கிறாரோ அவரையே மகா பெரியவா என்கிறோம்.

பக்தி என்பது இளம் வயதில் வயதில் வரவேண்டுமா; முதுமையில் வரவேண்டுமா என ராமகிருஷ்ண பரமஹம்சரிடம், விவேகானந்தர் கேட்டார். அதற்கு, 'இளமைக்கு தெரியாது; முதுமைக்கு முடியாது' என பதிலளித்தார். பக்தியும், ஒழுக்கமும் இளமையிலேயே வந்தால்தான் தேசத்துக்கு நல்லது.

இளம் வயதிலேயே பக்தியையும், ஒழுக்கத்தையும் ஊட்டத்தவறியதாலேயே, தமிழகம் இன்று தறிகெட்டுக்கிடக்கிறது. இன்று தமிழக அரசுக்கு வருமானமே இரண்டு 'டி' தான். ஒன்று, டாஸ்மாக்; மற்றொன்று 'டெம்பிள்' (கோவில்). இந்த இரண்டு வருமானத்தை வைத்துதான், அரசாங்கமே நடக்கிறது.

ஆனால், கோவிலைதான் எதிர்க்கின்றனர். கடவுளை அறியாதவன் காட்டுமிராண்டி. ஆன்மிகத்தை, ஹிந்துக்களை எதிர்ப்பவர் யாரோ, அவர்களை எதிர்ப்பதை நாம் முதல் கடமையாக கொள்ளவேண்டும்.

இவ்வாறு, நாகை முகுந்தன் பேசினார்.

கிளாசிக் போலோ நிர்வாக இயக்குனர் சிவராம், மகா பெரியவரால் தனது வாழ்க்கையில் நிகழ்ந்த மாற்றங்கள் குறித்து பேசினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X