திருப்பூர்:ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு, திருப்பூரில், 'தினமலர்' நாளிதழ் சார்பில் நடந்த நிகழ்வில், மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டி, 'தினமலர்' நாளிதழ் சார்பில், திருப்பூர், நஞ்சப்பா பள்ளி மைதானத்தில், நேற்று மாலை அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடந்தது. மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து, பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம், 'வெற்றி' அமைப்பின் தலைவர் சிவராம், 'அனிதாடெக்ஸ்காட்' நிறுவன நிர்வாக இயக்குனர் சந்திரசேகர், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க இணைச்செயலாளர் குமார் துரைசாமி ஆகியோர் மோட்ச விளக்கை ஏற்றி வைத்தனர்.
தொடர்ந்து, ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. கட்சியினர், தன்னார்வ அமைப்பினர், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மற்றும் பொதுமக்கள், மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தினர்.
குமரானந்தபுரம் பகுதியை சேர்ந்த பாலன் என்ற சிவனடியார், சங்குநாதம் செய்து அஞ்சலி செலுத்தினார்.
தி.மு.க., மாநகர செயலாளர் நாகராஜன், பா.ஜ., வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல், ஹிந்து முன்னணி மாநில பொதுசெயலாளர் கிேஷார்குமார், ம.தி.மு.க., மாவட்ட செயலாளர் நாகராஜ், பி.எம்.எஸ்., நிர்வாகிகள் மாதவன், செந்தில், திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க(டீமா) தலைவர் முத்துரத்தினம், ஹிந்து சமய அறநிலையத்துறை, மாவட்ட குழு உறுப்பினர் முத்துராமன், திருக்கோவில் திருத்தொண்டர் அறக்கட்டளை அமைப்பாளர் ராமகிருஷ்ணன், கொங்கு குலாலர் உடையார் அறக்கட்டளை, தெற்கு ரோட்டரி முன்னாள் தலைவர் சக்திவேல், சேவா பாரதி மாவட்ட துணை தலைவர் மோகன்குமார்; ஐ.ஜே.கே., மாவட்ட தலைவர் பாரிகணபதி, 'களம்' அமைப்பு நிர்வாகிகள், சிறப்பு எஸ்.ஐ., முருகன் தலைமையிலான போலீசார் உள்ளிட்டோரும், ஏராளமான சிறுவர், சிறுமியர், பெண்களும் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து, மவுன அஞ்சலி செலுத்தினர்.