தியாகதுருகம்-தியாகதுருகத்தில் அ.தி.மு.க., சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
முகாமிற்கு, நகர செயலாளர் ஷியாம் சுந்தர் தலைமை தாங்கினார்.
மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான்பாஷா, நகர அவைத் தலைவர் அய்யம்பெருமாள், முன்னாள் நகர செயலாளர் சுப்ரமணியன், நகர துணைச் செயலாளர் கிருஷ்ணராஜ், ஜெ., பேரவைச் செயலாளர் வேல்நம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரதிநிதி வேலுமணி வரவேற்றார்.
முகாமில் செந்தில்குமார் எம்.எல்.ஏ., 15 வார்டுகளிலும் உறுப்பினர் சேர்க்கை முகாமினை பார்வையிட்டு அதிகளவில் உறுப்பினர்களை சேர்க்கமாறு நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.
மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் சதாசிவம், நகர இணைச் செயலாளர் கங்கா ஜெயபிரகாஷ், பொருளாளர் பாண்டுரங்கன், மாவட்ட பிரதிநிதி ரமேஷ், மகளிர் அணி தலைவி மாதேஸ்வரி, நிர்வாகிகள் பாலமுரளி கிருஷ்ணன், ஏழுமலை, ரங்கசாமி, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் முனிராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.