திருநகர் : திருநகர் மக்கள் மன்றம் சார்பில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் நினைவஞ்சலி கூட்டம் நடந்தது.
மன்ற தலைவர் செல்லா தலைமை வகித்தார். செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். திருநகர் அனைத்து வியாபாரிகள் நலச்சங்க செயலாளர் முகம்மது இஷாக், நடைப்பயிற்சி நண்பர்கள் குழு சந்திரன் முன்னிலை வகித்தனர்.
ஓமியோபதி மருத்துவர் சுப்பிரமணியன், கப்பலுார் தொழிலதிபர்கள் சங்கத் தலைவர் ரகுநாதராஜா, தியாகராஜர் பொறியியல் கல்லுாரி பேராசிரியர் முத்துராமலிங்கம், திருநகர் ஜெயின்ஸ் குரூப் செயலாளர் மரகதசுந்தரம், திருநகர் மக்கள் மன்ற துணைத் தலைவர் பொன் மனோகரன், கவுன்சிலர் இந்திரா காந்தி, திருமங்கலம் இலக்கிய பேரவை இணைச் செயலாளர் குரு சந்திரசேகரன், ஓய்வுபெற்ற கூட்டுறவு துறை துணைப் பதிவாளர் குருசாமி, சவீதா பாய் பள்ளி கவுரவ நிர்வாக அலுவலர் நாகராஜன், விளாச்சேரி கைவினைஞர்கள் சங்க நிர்வாகி ராமலிங்கம் பேசினர்.
ஒருங்கிணைப்பாளர்கள் மாணிக்கராஜ், பாக்கியம், சங்கமம், ராஜேந்திரன், ராஜாராம் உள்பட ஏராளமான கலந்து கொண்டனர்.