கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் வட்டார வள மையத்திற்கு உட்பட்ட, ஆசிரியர்
களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, லாலாப்பேட்டை வட்டார வள மையத்தில் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி வழங்கப்பட்டது. 4, 5ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி வழங்கப்பட்டது. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கு, மாணவர்களுக்கு எவ்வாறு பாடம் நடத்துவது, பாடப்புத்தகம் குறித்த பயிற்சி, மாணவர்களுக்கு கற்பித்தல் உபகரணங்கள் கொண்டு விளக்கம் அளிப்பது குறித்த பயிற்சி மூன்று நாட்கள் நடத்தப்பட்டது. இதில், 137 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, மாவட்ட கல்வி அலுவலர் பொறுப்பு ராமநாதன் செட்டி, மாவட்ட தொடக்க நிலை மணிவண்ணன், மாயனுார் ஆசிரியர் பயிற்சி முதல்வர் சுப்பிரமணி, செனட் பார்வையாளர் மலர்கொடி, பயிற்சி மைய விரிவுரையாளர் சின்னக்
கவுண்டர், மற்றும் வட்டார வள மையம் மேற்பார்வையாளர்
முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.