கரூர்: தமிழ்நாடு அரசு கலைக்கல்லுாரி ஆசிரியர் மன்றத்தின், மாநில பொதுக்குழு கூட்டம், மாநில தலைவர் சிவராமன் தலைமையில், கரூர் அரசு கலைக்கல்லுாரியில் நேற்று நடந்தது.
அதில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், 2023-24ம், கல்வியாண்டில் கல்லுாரி வகுப்புகள் தொடங்கும் முன், கல்லுாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வை நடத்த வேண்டும், மாற்றுப்பணிகளில் ஓராண்டுக்கு மேல் பணியாற்றி வரும், ஆசிரியர்களின் மாற்றுப்பணி உத்தரவை ரத்து செய்ய வேண்டும், கடந்த, 2000ம் ஆண்டில் பணியில் சேர்ந்த ஆசிரியர்களின், ஒட்டுமொத்த பணிமூப்பு பட்டியலை வெளியிட வேண்டும்.
கல்லுாரிகளில் காலியாக உள்ள, பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாநில பொதுச்செயலாளர் குமார், கரூர் மாவட்ட தலைவர் சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.