கிராமம் பகுதியில் நள்ளிரவு நேரத்தில்தான் குடிநீர் குழாய்களில் தண்ணீர் திறக்கப்படுகிறது. குறிப்பாக இரவு, அதிகாலை நேரத்தில் தண்ணீர் விடப்படுவதால், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனால், பொதுமக்கள் தண்ணீர் வரும் நேரங்களில் இரவு முழுவதும் துாங்காமல் காத்திருக்க வேண்டிய நிலையில் உள்ளனர். எனவே, பகல் நேரங்களில் குடிநீர் வினியோகம் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.