நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், மூன்று துணை கலெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில், கலெக்டரின் நேர்முக உதவியாளராக (பொது) பணியாற்றி வந்த சிவசுப்ரமணியன், திருச்சி மாவட்டம், லால்குடி ஆர்.டி.ஓ.,வாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். முசிறி ஆர்.டி.ஓ., மாதவன், நாமக்கல் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராக (பொது) நியமிக்கப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்ட கலால் துறை உதவி கமிஷனர் செல்வி, திருப்பூர் மாவட்ட சமூக பாதுகாப்புத்திட்ட தனி துணை கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) பாலகிருஷ்ணன், நாமக்கல் மாவட்ட கலால்துறை உதவி கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், நாமக்கல் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) நடேசன், கோவை தெற்கு மாவட்ட தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேசன் மேலாளராக (சில்லறை விற்பனை) பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.