நாமக்கல்; வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத, இரண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு, பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சேந்தமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில், 2020ல், இன்ஸ்பெக்டராக சதீஷ்குமார் பணியாற்றினார். அப்போது, 2020 முதல், 2022-ம் ஆண்டு வரை நடந்த சாலை விபத்து வழக்குகள் தொடர்பாக, அவர் சேந்தமங்கலம் நீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணையில் ஆஜராகாமல் இருந்து வந்தார். இதையடுத்து, சேந்தமங்கலம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஹரிஹரன், இன்ஸ்பெக்டர் சதீஷ்குமாரை, வரும், 8ல், நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜர்படுத்த பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார், தற்போது, சிவகங்கை மாவட்ட தெற்கு கிரைம் பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
இதேபோல், 2015ல், புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் வளவன். அங்கு நடந்த வழக்கு ஒன்றியில், சேந்தமங்கலம் நீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணையில் இதுவரை, அவர் ஆஜராகவில்லை. அதையடுத்து, நாளை (ஜூன், 6), நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, இன்ஸ்பெக்டர் வளவனுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து, நீதிபதி உத்தரவிட்டார்.