குமாரபாளையம்: கோழிக்கடை ஊழியரை தாக்கிய ஏழு பேரை குமாரபாளையம் போலீசார் கைது செய்தனர்.
குமாரபாளையம் அருகே, ஆனங்கூர் சாலை, ஆலாங்காட்டுவலசு பகுதியில் கோழிக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் அதே பகுதியை சேர்ந்த ஜெகதீஷ், 26, என்ற பட்டதாரி வாலிபர், பகுதி நேரமாக பணியாற்றி வருகிறார். சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட தகராறு காரணமாக நேற்று காலை, 8:30 மணியளவில் ஜெகதீஷ் வேலை செய்யும் கடைக்கு வந்த, 7 பேர், ஜெகதீஸை தாக்கினர். இதில், அவருக்கு பலத்தகாயங்கள் ஏற்பட்டன.
இதுகுறித்து, ஜெகதீஷ் கொடுத்த புகார்படி, தாக்குதலில் ஈடுபட்ட கல்லங்காட்டுவலசு, கலியனுார், மேட்டுக்கடை பகுதிகளை சேர்ந்த, சிவராஜ், 40, கனகராஜ், 27, பூபதி, 28, கிருஷ்ணமூர்த்தி, 30, ஜெகநாதன், 30, மோகன்ராஜ், 30, முருகானந்தம், 33, ஆகிய 7 நபர்களை இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையிலான குமாரபாளையம் போலீசார் கைது செய்தனர்.