நாமக்கல்: நாமக்கல் ராமாபுரம்புதுார் பர்வதவர்தினி சமேத ராமநாதர் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா, வரும், 7ல் நடக்கிறது.
நாமக்கல் ராமாபுரம்புதுார், பர்வதவர்தினி சமேத ராமநாதர் சுவாமி, செல்வ கணபதி, முருகன், பகவதி அம்மன், நவகிரஹங்கள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு, வரும், 7ல் மஹா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நேற்று காலை, மோகனுார் காவிரியாற்றிலிருந்து பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து, பலப்பட்டறை மாரியம்மன் கோவிலில் இருந்து ஊர்வலமாக சென்றனர்.
இன்று மஹாகணபதி ஹோமம், நவகிரஹ ஹோமம், வாஸ்து சாந்தி பூஜை, கோபுர கலசங்கள் வைத்தல், பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் ஆகியவை நடக்கிறது. மதியம், 2:00 மணிக்கு முளைப்பாரி அழைத்தலும், 4:00 மணிக்கு கும்பங்களை சுவாமி தோட்டத்தில் இருந்து யாக சாலைக்கு அழைத்து வருதலும், இரவு, 7:30 மணிக்கு முதற்கால பூர்ணஹூதி நடக்கிறது.