தர்மபுரி: ''தி.மு.க., அரசு, கமிஷனுக்காக கர்நாடகாவில் இருந்து ராகி கொள்முதல் செய்கிறதா?'' என, அன்புமணி கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து அவர், தர்மபுரியில் நிருபர்களிடம் கூறியதாவது: தர்மபுரி மாவட்டத்தில் காவிரி உபரிநீர் திட்டத்தை, தி.மு.க., அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும். கள்ளச்சாராய சாவுக்கு பின், தாம்பரத்தில் ஒரே நாளில் அனுமதியில்லாமல் இயங்கிய, 77 பார்கள் மூடப்பட்டுள்ளன. இதுவரை அந்த பார்கள் இயங்க அனுமதி வழங்கியவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்னியர்களுக்கு, 10.5 சதவீத இடஒதுக்கீட்டை தி.மு.க., அரசு விரைந்து வழங்க வேண்டும்.
தர்மபுரி, நீலகிரி மாவட்டங்களில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு, 2 கிலோ ராகி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், ராகி அதிகம் விளையும் தர்மபுரி மாவட்டத்தில் கொள்முதல் செய்யாமல், கர்நாடகாவில் இருந்து கொள்முதல் செய்வது
கமிஷனுக்காகவா? இவ்வாறு அவர் கூறினார்.