பெரம்பலுார்:பெரம்பலுாரில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில், பிரபல ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
பெரம்பலுார் மாவட்டம், அரணாரை கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ், 3. தி.மு.க., கிளை செயலராகவும் உள்ள இவர், சில ஆண்டுகளுக்கு முன், இஸ்லாமிய பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதால், அப்துல் ரகுமான் என்று தன் பெயரை மாற்றிக் கொண்டார்.
நண்பரை வெட்டிக்கொலை செய்தது உட்பட இரண்டு கொலை வழக்குகள், வழிப்பறி, கட்டப் பஞ்சாயத்து, மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
நேற்று மாலை 4:00 மணிக்கு பெரம்பலுார் பாலக்கரை பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டல் பாரில், அவரது நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தார்.
அப்போது, முகமூடி அணிந்து வந்த மூன்று பேர் கும்பல், செல்வராஜை சரமாரியாக வெட்டிக்கொலை செய்து தப்பியோடி விட்டது.
பெரம்பலுார் போலீசார் வழக்கு பதிந்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.