திருச்சி: திருச்சி மத்திய சிறையில் செயல்படும் ஐ.டி.ஐ.,யில், போக்சோ வழக்கில் தண்டனை பெற்று, கோவை மத்திய சிறையில் இருந்து வந்த திருமூர்த்தி, 25, என்ற கைதி, டைலரிங் படித்து வந்தார்.
கடந்த, ஒன்றாம் தேதி வகுப்பு நடந்த போது, மதிய உணவு இடைவேளையின் போது, டைலரிங் சொல்லித்தர வந்த, 45 வயதுடைய ஆசிரியையின் வாயில் துணியை வைத்து அடைத்து, தவறாக நடந்து, மானபங்கம் செய்தார்.
இதையடுத்து அவசர, அவசரமாக, ஆசிரியையை மானபங்கம் செய்த கைதி திருமூர்த்தியின் ஐ.டி.ஐ., படிப்பை ரத்து செய்து, அவரை மீண்டும் கோவை சிறைக்கு, நேற்று அனுப்பி வைத்துள்ளனர்.