ஆக்கப்பூர்வமான யோசனை...
சிறந்த மற்றும் நுணுக்கமான சிந்தனைகளை வெளிப்படுத்தும் விதமாக, 'சிந்திப்போமா பகுதி' உள்ளது. தொழில் துறை, விவசாயம், சுற்றுச்சூழல், கல்வி என, அனைத்து தளங்களும் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில், அத்துறையில் சாதித்தவர்கள் தங்களின் அனுபவம் வாயிலாக முன்வைக்கும் ஆக்கப்பூர்வமான யோசனைகளை சொல்கின்றனர். அதில் கூறப்படும் யோசனைகளை, சம்பந்தப்பட்ட துறையினர் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து அவற்றை நடைமுறைப்படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
-ஈஸ்வரன்,
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம்
திருப்பூர் மாவட்ட தலைவர்.
வளமான சிந்தனை...
பல்துறை செயற்பாட்டாளர்களின் கருத்துகளை தாங்கி வரும், 'சிந்திப்போமா' பகுதி மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது. தங்களின் கல்வி மற்றும் அனுபவங்களின் எண்ணப்பகிர்வாக விளங்கும் இப்பகுதியில் கூறப்படும் கருத்துகளை உள்வாங்கி, செயலாக மாற்றினால் கண்டிப்பாக வெற்றி பெறலாம். குறிப்பாக, இளைஞர்கள், இளம் தொழில் முனைவோருக்கு, இப்பகுதி மிகுந்த பயனளிக்கும் என்பதில், மாற்றுக்கருத்தில்லை. குறிப்பாக, மாணவர்கள் இதனை தொடர்ந்து வாசித்தால், அவர்களின் சிந்தனை நிச்சயம் மேம்படும்.
- ராமகிருஷ்ணன்
மாவட்ட செய்தி தொடர்பாளர்
தேசிய ஆசிரியர் சங்கம்